ADDED : செப் 14, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்ட முத்து, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தின் 2026–29ம் ஆண்டிற்கான புதிய ஆட்சி மன்றக் குழுவுக்கான தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்தது. இத்தேர்தலில், வெற்றி பெற்ற முத்து, ஆறாவது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, தமிழ்ச்சங்கத்தின் புதிதாக தலைவராக தேர்வு செய்யப்பட்ட முத்து மற்றும் சங்கப் பொறுப்பாளர்கள், முதல்வர் ரங்கசாமியை சட்டசபை வளாகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதில், தமிழ்ச் சங்கப் பொருளர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் திருநாவுக்கரசு,ஆட்சிக்குழு உறுப்பினர் ஆனந்தராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
