தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாரம், முத்து விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா 

சாரம், முத்து விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா 

சாரம், முத்து விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா 


ADDED : செப் 14, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாரம், முத்து விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதிவுலா நடந்தது. 

புதுச்சேரி, சாரத்தில் முத்து விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று துவங்கியது. இதையொட்டி, காலை மற்றும் மாலை நேரங்களில் மகா அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு மூஷிக வாகனத்தில் முத்து விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. இதில், கணபதி, கந்தன் உள்ளிட்ட திரளான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து, இன்று(15ம் தேதி) காலை 7:00 மணிக்கு மகா அபிேஷகமும், 9:00 மணிக்கு மகா தீபாராதனை, முத்துவிநாயகர் உள்பிரகார உற்சவம் நடக்கிறது. நாளை (16ம் தேதி) மாலை 5:00 மணிக்கு மகா அபிேஷகம், இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை, சுவாமி வீதிவுலா நடக்கிறது. 

ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன், சிவராம குருக்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us