விநாயகர் சதுர்த்தியையொட்டி 121 கிலோ மெகா லட்டு படையல்
விநாயகர் சதுர்த்தியையொட்டி 121 கிலோ மெகா லட்டு படையல்
ADDED : செப் 14, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரியில் கடையில் 121 கிலோ மெகா லட்டு படையலிடப்பட்டது.
புதுச்சேரி வள்ளலார் சாலை வெங்கட்டா நகர் பார்க் அருகில் தனியார் ஸ்வீட் கடை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியையொட்டி மெகா லட்டு விநாயகருக்கு நெய்வேய்தயம் செய்யப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் 11 கிலோவில் படையலிடப்பட்ட லட்டு, தற்போது படிபடிப்பயாக உயர்ந்து 121 கிலோவில் வந்து நிற்கிறது. 20 கிலோ கடலைமாவு, 40 லிட்டர் நெய், 50 கிலோ சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை கொண்டு இந்த மெகா லட்டு தயாரிக்கப்பட்டது. படையிடப்பட்ட இந்த லட்டு மூன்று நாட்களுக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
