ADDED : செப் 14, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மடுகரை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பன்ருட்டு திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிவா 32, என்பவர் மது போதையில் மடுகரை–பட்டாம்பாக்கம் சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதேபோல், உறுவையாறு–மங்கலம் சாலையில் ஆபாசமாக பேசிய ஆரியப்பாளையம் கமலக்கண்ணன், 29;, என்பவரை வில்லியனுார் போலீசார் கைது செய்தனர்.
