/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயற்குழு கூட்டம்
/
தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயற்குழு கூட்டம்
ADDED : ஜன 10, 2025 05:48 AM

புதுச்சேரி: தமிழ்நாடு மீனவர் பேரவையின் 16வது மாநில செயற்குழு கூட்டம், புதுச்சேரி ஆனந்தா இன் ஓட்டலில் நடந்தது.
பேரவை தலைவர் அன்பழகனார் தலைமை தாங்கினார். தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ முன்னிலை வகித்தார். கொள்கை பரப்பு செயலாளர் பார்த்திபன் வரவேற்றார்.
பொது செயலாளர் தாஜூதீன், செந்தில்குமார், பொருளாளர் ரகு, மகளிரணி தலைவி ஜெயந்தி, இளைஞரணி தலைவர் ரஞ்சித், துணைத் தலைவர்கள் கவுரிலிங்கம், ஜெயபால், செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கடல் சாகச பயணம் மேற்கொண்ட ஊனமுற்ற குழந்தைகளை வரவேற்ற தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ, தமிழ்நாடு அரசு மீனவ நல வாரிய தலைவர் தாஜூதீன், எழுத்தாளர் ராமஜெயம், அழகேசன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வாழும் பாரம்பரிய மீனவர்களை பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும். மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் குணசீலன் நன்றி கூறினார்.