/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழ்நாடு, ஹைதராபாத், ஆந்திரா அணிகள் வெற்றி
/
தமிழ்நாடு, ஹைதராபாத், ஆந்திரா அணிகள் வெற்றி
ADDED : பிப் 01, 2025 05:48 AM
புதுச்சேரி: சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, ஹைதராபாத், ஆந்திரா அணிகள் வெற்றி பெற்றன.
புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஹைதராபாத், கோவா ஆகிய 7 மாநில கிரிக்கெட் அசோசியஷன் இணைந்து 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான 2 நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் புதுச்சேரி துத்திப்பட்டு சீகெம் மைதானம் மற்றும் லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்து வருகிறது.
சீகெம் மைதானம் 3ல் நடந்த, போட்டியில் ஆந்திரா, கேரளா அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஆந்திரா அணி 90 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 396 ரன்கள் எடுத்தது. கேரளா அணி 74 ரன்களில் ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலையில் ஆந்திரா அணி வெற்றி பெற்றது.
4ல் கோவா, ஹைதரபாத் அணி மோதியது. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழந்து 407 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது . கோவா அணி 162 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது . முதல் இன்னிங்ஸ் முன்னினையில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரி மைதானத்தில் தமிழ்நாடு, கர்நாடக அணி மோதியது. முதலில் விளையாடிய தமிழ்நாடு அணி 90 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 304 ரன்கள் எடுத்து, கர்நாடக அணி 90 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 235 ரன்கள் மட்டுமே எடுத்தது . முதல் இன்னிங்ஸ் முன்னினையில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது .