ADDED : செப் 24, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நெல்லித்தோப்பில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தமிழகம் விரைந்துள்ளனர்.
நெல்லிதோப்பு, பெரியார் நகர் ஜபார் பாய் தோட்டத்தில், வசித்தவர் சுரேஷ்குமார், 27. இவர், கடந்த 21ம் தேதி மதியம் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரின் தாய் பூங்கோதை அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், அவரின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாக, பிரேத பரிசோதனையில், தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தமிழக பகுதிக்கு விரைந்துள்ளனர்.
