/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கமல சாய்பாபா கோவிலில் நாளை தமிழ் புத்தாண்டு விழா
/
கமல சாய்பாபா கோவிலில் நாளை தமிழ் புத்தாண்டு விழா
ADDED : ஏப் 12, 2025 10:01 PM
புதுச்சேரி : பிள்ளைச்சாவடி, கமல சாய்பாபா கோவிலில், தமிழ் புத்தாண்டு விழா நாளை நடக்கிறது.
புதுச்சேரி, பிள்ளைச்சாவடி இ.சி.ஆரில், இன்ஜினியரிங் கல்லுாரி எதிரே கமல சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தமிழ் புத்தாண்டு விழா நாளை (14ம் தேதி) நடக்கிறது.
விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு கொடி யேற்றம், 8:30 மணிக்கு கமல சாய்பாபாவுக்கு சிறப்பு புஷ்பாபிேஷகம், 9:00 மணி முதல் 11:30 மணி வரை சாய் பஜன்ஸ், 11:45 மணிக்கு சாய்பாபா பல்லக்கு உற்சவம், 12:00 மணிக்கு ஆரத்தி நடக்கிறது.
மாலை 4:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 5:00 மணிக்கு பஞ்சாங்க படலம் (ஆண்டு ராசி பலன்), 6:00 மணிக்கு ஆரத்தி, 6:45 மணிக்கு சாய்பாபா பஜன்ஸ் மற்றும் கர்நாடக இசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8:30 மணிக்கு ஆரத்தி மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.