ADDED : ஏப் 15, 2026 10:32 PM

புதுச்சேரி: வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம் சார்பில், தமிழ்ப் புத்தாண்டையொட்டி, சிறப்பு கவியரங்கம் ஈஸ்வரன் கோவில் வீதி, சம்பூர்ணா அரங்கில் நடந்தது.
இயக்க தலைவர் கலைவரதன் தலைமை தாங்கினார். செயலாளர் கலைவாணி வரவேற்றார். துணைத் தலைவர் கதிரேசன், கலை பண்பாட்டுப் பிரிவு தலைவர் திரிபுரசுந்தரி முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சிவனடியார் காமாட்சி தலைமையில் சிவத்தொண்டர்கள் தேவாரம் திருவாசகம் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆசிரியர் சீனுவேணுகோபால், கலை பண்பாட்டுத் துறை முன்னாள் இயக்குநர் கலியபெருமாள், நெய்வேலி விஜயநாதன், இணைத் தலைவர் காஞ்சனா வாழ்த்தி பேசினர். நேதாஜி சந்திரசேகர் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, 'தமிழர் புத்தாண்டு' என்னும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு ஆசிரியர்கள் கலைவாணி, கயல்விழி தலைமை தாங்கினர். கவியரங்கில் சத்தியமூர்த்தி, பிரமிளாமேரி, சரஸ்வதி, பச்சையம்மாள், சுதர்சனம், ஓவியா, சசிகலா உளளிட்டோர் புத்தாண்டு கவிதை வாசித்தனர்.
நமச்சிவாயம் நன்றி கூறினார்.
