/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக அரசு பஸ்களை திருப்பி அனுப்பிய எம்.எல்.ஏ.,
/
தமிழக அரசு பஸ்களை திருப்பி அனுப்பிய எம்.எல்.ஏ.,
ADDED : மார் 09, 2024 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் 'பந்த்' காரணமாக, அரசு, தனியார் மற்றும் தமிழக அரசு பஸ்கள் இயங்கவில்லை. காலை, 9:00 மணிக்கு புதுச்சேரி பஸ் நிலையத்திற்கு, தமிழக அரசு பஸ்கள் வந்தன.
தகவல் அறிந்த நேரு எம்.எல்.ஏ., தனது ஆதரவாளர்களுடன், உடனடியாக பஸ் நிலையம் வந்தார். அங்கு பயணிகளை ஏற்றி கொண்டிருந்த, பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர்களை எச்சரித்தார். அவர் ' இந்த 'பந்த்' சம்மந்தமாக, உங்கள் டெப்போவிலும், அதிகாரிகளிடமும், பஸ்களை இயக்க வேண்டாம் என கடிதம் தந்துள்ளோம்.
அப்படியிருக்க பஸ்களை எப்படி ஓட்டலாம் என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, அங்கிருந்து, தமிழக பஸ்கள் திரும்பி சென்றன.

