ADDED : நவ 06, 2025 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மொளப்பக்கம், ஓம் சக்தி நகரில், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், ரூ. 10.94 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியை துணை சபாநாயகர் ராஜவேலு, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவிப் பொறியாளர் ராமலிங்கேஸ்வராவ், இளநிலை பொறியாளர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதேபோல் மடுகரையில் ரூ. 5.94 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.

