/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தார் சாலை பணி : துணை சபாநாயகர் துவக்கி வைப்பு
/
தார் சாலை பணி : துணை சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 29, 2025 07:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் தொகுதி பண்டசோழநல்லுார் குளத்துமேட்டுத் தெருவில் ரூ. 6 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பில் வடிகால் வாய்கால், கல்மண்டபம் மூகாம்பிகை கிருஷ்ணசாமி நகரில் ரூ. 11 லட்சத்த 93 ஆயிரம் மதிப்பில் தார்சாலை, கல்விக்கரசி நகரில் ரூ. 4 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் தார்சாலை உள்ளிட்ட பணிகள் பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் ராமலிங்கேஸ்வர ராவ், இளநிலை பொறியாளர்கள் மாணிக்கசாமி, அய்யப்பன், என்.ஆர்.காங்., பிரமுகர் சுப்பரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

