ADDED : ஏப் 11, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; முத்தியால்பேட்டை, வெள்ளவாரி வீதியின் பிரதான சாலையில் பொதுப் பணித்துறை மூலம் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய புதிய தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ் குமார் தலைமை தாங்கி, பூஜை செய்து சாலை பணியினை துவக்கி வைத்தார். இதில், பொதுப்பணித்துறை மத்திய செயற்பொறியாளர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், விசுவநாதன் நகர், வெள்ள வாரி வீதி பொதுமக்கள், எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.