/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ரோபோடிக்' கேமரா மூலம் பாதாள சாக்கடை அடைப்பு அகற்றும் பணி
/
'ரோபோடிக்' கேமரா மூலம் பாதாள சாக்கடை அடைப்பு அகற்றும் பணி
'ரோபோடிக்' கேமரா மூலம் பாதாள சாக்கடை அடைப்பு அகற்றும் பணி
'ரோபோடிக்' கேமரா மூலம் பாதாள சாக்கடை அடைப்பு அகற்றும் பணி
ADDED : பிப் 10, 2025 06:26 AM

புதுச்சேரி : புதுச்சேரி புல்வார்டு பகுதியில் பாதாள சாக்கடை குழாய் அடைப்புகளை ரோபோடிக் கேமரா மூலம் கண்டறிந்து அகற்றும் பணியை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி நகர பகுதியில் கழிவுநீரை சுத்தம் செய்து, கடலுக்குள் அனுப்ப லாஸ்பேட்டை, கனகன் ஏரி, திப்புராயப்பேட்டை பகுதியில் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், நகரின் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடி துர்நாற்றம் வீசி வருகிறது.
பாதாள சாக்கடை அடைப்பிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பொதுப்பணித் துறை பொது சுகாதார கோட்டம் ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தின் கீழ் ரூ. 52 கோடி செலவில் ரோபோடிக் கேமரா மூலம் அடைப்பு பகுதியை கண்டறிந்து, அந்த இடத்தில் மட்டும் துார்வாரும் திட்டம் துவங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, கடந்த மாதம் நடந்த மறு ஆய்வு கூட்டத்தில், துார்வாரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன.
அதன்படி, நவீன ரோபோடிக் கேமராக்கள் உதவியுடன் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்கள் ஆராயப்பட்டு, அந்த இடத்தின் கழிவுநீர் அடைப்புகளை துார்வாரி அகற்றும் பணியும், அப்படி துார்வாரும்போது பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய்களில் உடைப்பு இருப்பது கண்டறியப்பட்டால், பலவீனமான குழாய்கள் முற்றிலும் அகற்றப்பட்டு, புதிய குழாய்கள் பதிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், தலைமை செயலகம் அருகே நடந்து வரும் பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்யும் பணியை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு செய்தார்.
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், பொறியாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

