/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளிப்பு
/
தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளிப்பு
ADDED : ஜன 26, 2026 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் குடியரசுத் தினத்தை யொட்டி, விடுதலை போராட்ட தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், முதல்வர் ரங்கசாமி தியாகிகளுக்கு சால்வை அணிவித்து, அனைத்து விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்குவதற்கான காசோலையை வழங்கி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து ஜவகர் சிறுவர் இல்ல மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அரசு சார்பு செயலர் ஹிரன், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் மேத்யூ பிரான்சிஸ், துறை அதிகாரிகள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

