தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதிய சிந்தனையை விதைத்துள்ளது: ஆசிரியர்கள் பேட்டி

புதிய சிந்தனையை விதைத்துள்ளது: ஆசிரியர்கள் பேட்டி

புதிய சிந்தனையை விதைத்துள்ளது: ஆசிரியர்கள் பேட்டி


UPDATED : செப் 19, 2026 10:03 PM

ADDED : செப் 19, 2026 09:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 10:03 PM ADDED : செப் 19, 2026 09:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதிய சிந்தனையை விதைத்துள்ளது ஆசிரியர்கள் விழிப்புணர்வோடும், ஒவ்வொரு நாளும் அப்டேட்டாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக படிக்க வேண்டும், யதார்த்த சூழ்நிலையை புரிந்து கொண்டு சவால்களை சமாளிப்பது எப்படி என நகைச்சுவையாக கொடுத்தனர். இதனால், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்களின் 'ஸ்ட்ரஸ்' 'பஸ்டர்ஸ்' ஆன உணர்வு ஏற்பட்டது. புதிய சிந்தனையோட எதிர்காலத்தில், மாணவர்களை எதிர்கொள்ள இந்த நிகழ்ச்சி உதவியாக இருந்தது.

-சத்யா,

சுல்தான்பேட்டை மேல்நிலைப்பள்ளி,

ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பு இந்த நிகழ்ச்சி, ஆண்டுதோறும் மேம்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர்களை ஊக்குவிப்பதாக உள்ளது. சிறப்பு விருந்தினர்களின் யதார்த்த பேச்சு, தற்போதுள்ள நடைமுறையில், ஆசிரியர்கள் எப்படி மாணவர்களை பக்குவமாக கையாள வேண்டும் என விளக்கியது சிறப்பாக இருந்தது. ஆசிரியர்களுக்கு உதவியாக இருந்த இந்நிகழ்ச்சிக்கு பாராட்டுகள்.

-உமா மகேஸ்வரி,

ஆச்சார்யா ஸ்ரீசம்பூர்ண வித்யாலயம்,

வில்லியனுார்.

கற்றல் பயணத்தில் நீந்த வாய்ப்பு இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. வகுப்பறையில் மாணவர்களை கையாள்வது குறித்து சிறப்பான ஆலோசனை, வழிகாட்டுதல் கிடைத்தது.

சிறப்பு விருந்தினர்களின் கருத்துக்கள் புதிய விஷயங்களை கற்று தந்தது. வகுப்பறையில் சலிப்பு, தொய்வு ஏற்படும் போது, இந்நிகழ்ச்சி மூலம் எனது கற்றல் பயணத்தில் நீந்தி செல்ல நல்ல வாய்ப்பாக இருக்கும்.

-மோகன்ராஜ்,

தையூர் அரசு மேல்நிலைப்பள்ளி,

விழுப்புரம் மாவட்டம்.

மகிழ்வித்து மகிழ் 'மகிழ்வித்து மகிழ்' என்ற கோட்பாட்டில், தினமலர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. நான் கடந்த, 5 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு வருகிறேன். ஆசிரியர்களுக்கு இது பயனுள்ளதாக உள்ளது. எங்களுக்கு மன அழுத்தத்திற்கு நல்ல மா மருந்தாக இருந்தது.

-யமுனாராணி,

முதல்வர்,

விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

வாழ்க்கையின் யதார்த்தம் ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்களுக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. வாழ்க்கையின் யதார்த்தத்தை விளக்கியது. எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், பதற்றமடையாமல், நிதானமாக பார்க்க வேண்டும். உடல்நலத்தை பேணி காப்பது போன்ற கருத்துகள் சிறப்பாக இருந்தன.

-சேகர்,

பாண்கோஸ் அரசு மேல்நிலைப்பள்ளி.

புதிய உத்வேகம் மகிழ்ச்சியாக இருந்தது. சிறப்பு விருந்தினர்கள் பேச்சு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில், மாணவர்களை ஆசிரியர்கள் குறித்து தெரிந்து கொண்டது உதவியாக உள்ளது. மனஅழுத்தத்தில் இருந்து வெளியான உணர்வு உள்ளது.

-கார்த்திக்,

ஏ.கே.டி., மேல்நிலைப்பள்ளி,

கள்ளக்குறிச்சி

கற்றல் திறன் மேம்பாடு சிறப்பு விருந்தினர்கள் சிறப்பான கருத்துகளை தெரிவித்தனர். ஆசிரியர்கள் கற்றல் திறனை மேம்படுத்துவது குறித்த கருத்துகள் உதவியாக உள்ளன. நகைச்சுவையாக நிறைய விஷயங்கள் எடுத்துக்கூறப்பட்டன.

-சிவக்குமார்,

புதுச்சேரி

பயனுள்ள கருத்துக்கள் இந்த நிகழ்ச்சிக்கு முதல் தடவை வந்துள்ளேன். பேச்சாளர்கள் பயன் உள்ள நிறைய கருத்துக்களை கூறினர். இங்கு நாங்கள் தெரிந்து கொண்டதை மாணவர்களிடம் கூறுவோம்.

மாணவர்களை கையாள்வது எப்படி என தெரிந்து கொண்டேன். மன அழுத்தம் குறைப்பு, பள்ளி பராமரிப்பு குறித்த கருத்துகள் பயன் உள்ளதாக இருந்தன

-சுதா, போன்நேரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

விழுப்புரம்

மன அழுத்தத்தை நீக்கும் நிகழ்ச்சி ஆண்டு முழுவதும் வரும் மன அழுத்தத்தை நீக்கும் நிகழ்ச்சியாக பார்க்கிறேன். இந்த காலகட்டத்தில், மாணவர்களை மேனிலைப்படுத்தும் கருத்துக்களை தெரிந்து கொண்டோம். இந்த நிகழ்ச்சி மாணவர்களை நல்வழி படுத்த உறுதுணையாக இருக்கும்.

-குப்பம்மாள்,

தலைமை ஆசிரியை,

கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us