/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மன அழுத்தம் தீர வழி கிடைத்தது ஆசிரியர்கள் பெருமிதம்
/
மன அழுத்தம் தீர வழி கிடைத்தது ஆசிரியர்கள் பெருமிதம்
மன அழுத்தம் தீர வழி கிடைத்தது ஆசிரியர்கள் பெருமிதம்
மன அழுத்தம் தீர வழி கிடைத்தது ஆசிரியர்கள் பெருமிதம்
ADDED : நவ 24, 2024 07:07 AM

மாணவர்களின் ஒழுக்கம், அடிப்படை கல்வி நிலை இன்றைய காலகட்டத்தில் சவாலாக உள்ளது. இந்நிலையில், ஆசிரியர்களுக்கான மன அழுத்தம் மேலாண்மை நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. போக்சோ சட்டங்கள் நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. அதுபோல், மன அழுத்தம் குறைக்கும் கருத்துக்கள் மிகவும் அருமை.
விவேக், ஆசிரியர்.
விவேக் அகாடமி, கள்ளக்குறிச்சி.
நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷகமாக உள்ளது. ஆசிரியர்களின் மன அழுத்தம் குறித்த வழங்கப்பட்ட கருத்துக்கள் பயனுள்ளதாக இருந்தது. பல்வேறு புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. ஆசிரியர்களின் நலனுக்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜோன், ஆசிரியர்.
ஜெயராணி பள்ளி, புதுச்சேரி.
கருத்தரங்கு சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு மாணவரையும் எப்படி பாதுகாக்க வேண்டும். புதிய கல்வி கொள்கைகள், ஆசிரியர்கள் மன அழுத்ததில் இருந்து விடுபடுவது, மாணவர்களின் திறனை மேம்படுத்துவது போன்ற நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்த 'தினமலர்' மற்றும் ஸ்பெக்ட்ரா நிறுவனத்திற்கு நன்றி.
ஸ்ரீதேவி, விரிவுரையாளர்.
நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளி, லாஸ்பேட்டை.
மன அழுத்த மேலாண்மை மற்றும் மாணவர்களுக்கான உரிமைகள் குறித்த இரு அமர்வுகளும் அருமை, பயனுள்ளதாகவும் இருந்தது. மாணவர்களின் பாதுகாப்பிற்கு சட்டங்கள் மூலம் எவ்வாறு திருத்துவது என்ற விளக்கவுரை உதவியாக இருக்கும். நிறைய புது விஷயங்களை தெரிந்து கொண்டோம். அதனை எங்கள் பள்ளியில் செயல்படுத்த ஆலோசனை தெரிவிப்பேன்.
மேகலா, ஆசிரியர்.
வாசவி இன்டர்நேஷ்னல் பள்ளி, முத்தியால்பேட்டை.
இரு அமர்வுகளும் பயனுள்ளதாக இருந்தது. குழந்தைகளுக்கான மன அழுத்தத்தை போக்குவது மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கையாளும் முறை, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக புதிதாக வந்துள்ள சட்டங்கள் குறித்தும் சிறப்பாக தகவல்கள் கிடைத்தது.
ஜீவலட்சுமி, ஆசிரியர்.
ஆச்சார்யா சிக் ஷா மந்தீர் பள்ளி, முத்திரைப்பாளையம்.
கொரோனாவுக்கு பிறகு மாணவர்களுக்கு பாடங்களை கற்றுக்கொடுக்க திணறி வருகிறோம். புது புது திட்ட பணிகளுடன், பாடம் நடத்த வேண்டும் என்பதால், மன உளைச்சல் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் மன அழுத்தம் குறைக்க நடந்த கருத்தரங்கு மிகவும் உதவியாக இருந்தது. குழந்தைகள் மீதான தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் சட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடிந்தது.
சின்னப்பராஜ், ஆசிரியர்.
ஊராட்சி ஒன்றி நடுநிலைப்பள்ளி, சித்தானங்கூர்.