தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பொது பேரவை கூட்டம்

ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பொது பேரவை கூட்டம்

ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பொது பேரவை கூட்டம்


ADDED : பிப் 19, 2024 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 04:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தின் பொதுப் பேரவை கூட்டம் குயவர்பாளையம் லெனின் வீதி கீர்த்தி மகாலில் நேற்று நடந்தது.

குழு உறுப்பினர் பொற்செழியன் வரவேற்றார்.சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2021-22,2022-23ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை சமர்பிக்கப்பட்டது.

மேலும் இவ்வாண்டுகளுக்கான தணிக்கை அறிக்கையின்படி லாபம் பங்கீடு செய்யப்பட்டது.

அத்துடன் பங்கு ஈவுத் தொகையை உறுப்பினர்களுக்கு வழங்க ஒப்புதல் பெறப்பட்டது.சங்கத்தின் அனுமதிக்கப்பட்ட பங்கு மூலதனத்தின் உச்சவரம்பை உயர்த்த பேரவை ஒப்புதல் அளித்தது.

உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.தேசிய, மாநில அளவில் நல்லாசிரியர் விருது பெற்ற உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர். உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் சங்கத் தலைவர் காலக்கடன் திரும்ப செலுத்தும் தவணை 60 மாதங்களில் இருந்து 120 மாதமாகவும்,குறுகிய காலக்கடன் தவணை 25 மாதங்களில் இருந்து 36 மாதமாகவும் உயர்த்தி நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதேபோல் மத்திய காலக்கடன் உச்சவரம்பு தொகை 25,00,000 ரூபாயில் இருந்து 30,00,000 ரூபாயாகவும்,குறுகிய காலக்கடன் உச்சவரம்பு தொகை 2,00,000 ரூபாயில் இருந்து 3,00,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தலைவர் மனோகரன் தெரிவித்தார்.

செந்தில்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us