தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சம்பளம் வழங்காததை கண்டித்து பேராசிரியர்கள் போராட்டம்

சம்பளம் வழங்காததை கண்டித்து பேராசிரியர்கள் போராட்டம்

சம்பளம் வழங்காததை கண்டித்து பேராசிரியர்கள் போராட்டம்


UPDATED : நவ 06, 2026 07:18 PM

ADDED : நவ 05, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:18 PM ADDED : நவ 05, 2026 08:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மூன்று மாதங்களாகச் ஊதியம் வழங்காததைக் கண்டித்து, பேராசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 2,500 பி.டெக்., 286 எம்.டெக்., மற்றும் 200 பி.எச்டி. மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு 130 பேராசிரியர்கள் மற்றும் 180 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான மாதச் சம்பளமாக ரூ.2.5 கோடி தேவைப்படுகிறது.

கடந்த 3 மாதங்களாக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், சம்பளம் தராததைக் கண்டித்து பேராசிரியர்கள், ஊழியர்கள் நேற்று மதியம் 2:30 மணியளவில் துணைவேந்தர் மோகனைச் சந்தித்துப் முறையிட்டனர்.

ஆனால், சம்பளம் வழங்குவது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பேராசிரியர்கள், ஊழியர்கள் நிர்வாகக் கட்டடத்தின் முகப்பில் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வளாகத்திற்குள் யாரும் செல்ல முடியாதவாறு மரக்கட்டைகள் மற்றும் பேரிகார்டுகளை போட்டு வழிகளை அடைத்தனர். இதனால் யாரும் உள்ளே செல்ல முடியாமலும், வகுப்புகள் முடிந்தும் கூட கல்லுாரி மாணவர்கள் வெளியேற முடியாமலும் முடங்கினர். கல்லுாரி பஸ்களும் வெளியே செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன.

தகவலறிந்து வந்த காலாப்பட்டு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்து தொடர்ந்து ஈடுபட்டனர்.

இதையடுத்த துணைவேந்தர் மோகன் பேச்சுவார்த்தை நடத்தி, ஊதியம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார். அதை தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us