தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோரிக்கைகளை வலியுறுத்தி 10ம் நாளாக பேராசிரியர்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி 10ம் நாளாக பேராசிரியர்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி 10ம் நாளாக பேராசிரியர்கள் போராட்டம்


ADDED : ஆக 13, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு கல்லுாரி பேராசிரியர்கள் பத்தாவது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள பேராசிரியர்களின் பதவி உயர்வு, ஊதிய நிலுவைத் தொகைக்கு எதிரான, புதிய அரசாணயை திரும்ப பெற வேண்டும். துணைப் பேராசிரியர்களின், அடிப்படை ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

இணைப் பேராசிரியர் தகுதி பெற்றவர்களை, 2017ம் ஆண்டு முதலே, இணைப் பேராசிரியர் என்று பதவி உயர்த்தி ஆணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ம் தேதி முதல் புதுச்சேரியின் நான்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களும் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று  பத்தாவது நாளாக, பேராசிரியர்களின் போராட்டம் தொடர்ந்தது. அவர்கள் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் தங்களது, பணியை முடித்துவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை உயர்கல்வி துறை இயக்குனர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். பேராசிரியர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, கல்லுாரி வளாகங்களில், பகல், இரவு என, பேராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us