/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில்நுட்ப மாலை கலந்தாய்வு கூட்டம்
/
தொழில்நுட்ப மாலை கலந்தாய்வு கூட்டம்
ADDED : பிப் 04, 2024 03:33 AM

புதுச்சேரி : இந்திய குடிமைப் பொறியாளர்கள் கலந்தாய்வுக் கூட்டமைப்பு, புதுச்சேரி மையப் பொறியாளர்கள் சார்பில் மாதாந்திர 'தொழில் நுட்ப மாலை' கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
ரெட்டியார்பாளையம் தனியார் ஹோட்டலில் நடந்த கூட்டத்திற்கு, கூட்டமைப்பு சேர்மன் பொறியாளர் முருகன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்பு துறை தலைமை பிளானரும், புதுச்சேரி திட்டமிடல் ஆணையத்தின் செயற்குழு உறுப்பினருமான கந்தர்செல்வம், ஜூனியர் டவுன் பிளானரும், முன்னாள் செயற்குழு உறுப்பினமான விஜயநேரு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இதில், கூட்டமைப்பு செயலாளர் விமல், பொருளாளர் சுந்தரராமன், துணைத் தலைவர் சுரேஷ்குமார், துணை செயலாளர் சத்தியவேல், அசோக்குமார், ராஜேஷ்குமார் மற்றும் 50க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஒருங்கிணைப்பாளர் அறச்செல்வன் வரவேற்றார். கூட்டத்தில், பொறியாளர் சதாசிவம் வாழ்நாள் சேவை மற்றும் சாதனைக்காக கவுரவிக்கப்பட்டார்.
ஜூனியர் டவுன் பிளானர்கள் கிருஷ்ணகுமார், கதிரவன் ஆகியோர் புதுச்சேரி திட்டமிடல் ஆணையம் குறித்து விளக்கி பேசினர். உதவி ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி நன்றி கூறினார்.