/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ கல்லுாரியில் தொழில்நுட்பம் புதுமை விழா
/
மருத்துவ கல்லுாரியில் தொழில்நுட்பம் புதுமை விழா
ADDED : நவ 14, 2025 07:15 AM

புதுச்சேரி: புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம்மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் புதுமையான மருத்துவ தொழில்நுட்பம் ஹாகத்தான் நிகழ்ச்சி நடந்தது.
தட்சஷீலா பல்கலைக்கழக தலைமை இயக்குனர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜாராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு விருந்தினராக அமெரிக்கா பிளாக்செயின் கவுன்சில், இந்திய குழு தலைவர் பிரவேஷ் தேய், கான்பூர் மருத்துவ தொழில்நுட்ப துறை தலைவர் தீப்தி சக் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஹாகத்தானில் பங்கேற்ற அணிகள் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மருத்துவ தீர்வுகள், மருத்துவ சாதனங்கள், நோய் கண்டறிதல் தளங்கள், டிஜிட்டல் புதுமைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
ஏற்பாடுகளை கல்லுாரி இயக்குனர் காக்னே, கல்வித்துறை தலைவர் கார்த்திகேயன், ஆராய்ச்சி துறை தலைவர் சஞ்சய், மருத்துவ மேலாளர் பிரகாஷ், துணை மருத்துவ மேலாளர் கிரிஜா, துணை கல்வித்துறை தலைவர் சவுந்தர்யா ஆகியோர் செய்திருந்தனர்.

