/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.ஐ.டி.யூ.சி., சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
/
ஏ.ஐ.டி.யூ.சி., சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
ADDED : நவ 14, 2025 07:16 AM

புதுச்சேரி: ஏ.ஐ.டி.யூ.சி., சங்க மாநில பொதுக்குழு கூட்டம், முதலியார் பேட்டை சங்க தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் இன்றைய அரசியல் நிலைமைகளை குறித்து விளக்கினார். கூட்டத்தில் மாநில கவுரவ தலைவர் அபிஷேகம், மாநில பொருளாளர் அந்தோணி, துணை தலைவர்கள் முருகன், மன்னாதன், கிறிஸ்டோபர், செயலாளர்கள் தயாளன், துரைசெல்வம், முத்துராமன், மூர்த்தி, ஹேமலதா மற்றும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி., சங்கத்தின் மாநில பொதுச்செயலாளராக அந்தோணி, மாநில பொருளாளராக துரை செல்வம் தேர்வு செய்யப்பட்டனர். மாநில மாநாட்டினை ஜனவரி இறுதியில் நடத்துவது, அதற்கு முன் அனைத்து சங்கங்களின் பேரவை மற்றும் மாநாடுகளை நடத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

