/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைன் மூலம் ரூ. 3.3 லட்சம் மோசடி
/
ஆன்லைன் மூலம் ரூ. 3.3 லட்சம் மோசடி
ADDED : நவ 14, 2025 07:16 AM
புதுச்சேரி: ஆன்லைன் மூலம் 3.3 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
லாஸ்பேட்டையைச் சேர்ந்த நபர், ஆன்லைன் மூலம் துபாயில் வேலை தேடியுள்ளார். அவரை வாட்ஸ் ஆப்பில், தொடர்பு கொண்ட மர்ம நபர், துபாயில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அவர், விசா கட்டணமாக 75 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவரிடம் அவர் தவறிவிட்ட போன் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஆன்லைன் செயலியை பயன்படுத்தி ரூ. 4 ஆயிரத்து 999 ரூபாய் ஏமாற்றியுள்ளார்.
இதே போல், தர்மாபுரி பெண் 1 லட்சத்து 99 ஆயிரத்து 998 ரூபாய், சாமிபிள்ளைத் தோட்டத்தை சேர்ந்த நபர் 41 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தனர். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

