/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசார் 'கள்' குடிக்கும் வீடியோ வைரல்
/
போலீசார் 'கள்' குடிக்கும் வீடியோ வைரல்
ADDED : நவ 14, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஏனாம் போலீசார் கள் குடித்து ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி, ஏனாம் பிராந்திய போலீசார் போக்சோ வழக்கு தொடர்பாக புதுச்சேரி நீதிமன்றத்திற்கு வேன் மூலம் வந்தனர். வழக்கு விசாரணை முடிந்து நேற்று மாலை வேனில் புறப்பட்டனர்.
அவர்கள் புதுச்சேரியில் பாட்டிலில் கள் வாங்கினர். வேனில் கள்ளு குடித்து கொண்டு, எம்.ஜி.ஆர்., தத்துவ பாடல்களை போட்டு நடனமாடி மகிழ்ந்தனர். புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட இவர்கள் ஏனாம் வரை குடித்து செல்வதற்கு போதுமான கள் பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
அவர்கள் குடித்து ஆட்டம் போட்டதுடன், அதனை அவர்களது வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிட்டுள்ளனர்.

