நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி, தர்மாபுரி கல்கி நகரை சேர்ந்தவர் இளங்கோவன் மகன், மதன், 23; இவருக்கு கடந்த 2010ம் ஆண்டு வலிப்பு நோய் ஏற்பட்டது. ஜிப்மரில் சிகிச்சை பெற்று, மருந்து சாப்பிட்டு வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக சரியாக மருந்து சாப்பிடாததால் மனநலம் பாதிக்கப்பட்டது.
நேற்று வீட்டில், யாரும் இல்லாதபோது, அவர் அறையில் உள்ள மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

