ADDED : மார் 18, 2024 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால், :  காரைக்காலில் வாகனம் மோதி வாலிபர்  உயிழந்தார்.
நாகப்பட்டினம் நாகூர் சிவன்குளம் தெற்கு மடவிளாகம் பகுதியை சேர்ந்த மொய்த்து இவரது மகன் அகமது அலி,20; கடந்த மாதம் பைக்கில் சென்ற போது நாய் குறுக்கே வந்து விபத்து ஏற்பட்டு ,சிகிச்சை முடிந்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
கடந்த 16ம் தேதி நள்ளிரவு காரைக்கால் சென்று விட்டு வீட்டுக்கு சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அகமது அலி பலத்த காயத்துடன் அரசு மருந்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை  பலனின்றி அகமது அலி உயிழந்தார்.
திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப்  பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

