ADDED : ஜன 29, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது வைத்திக்குப்பம் சந்திப்பில் இரு வாலிபர்கள் குடி போதையில், அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக பேசியதோடு, தகராறில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள், வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வெற்றி (எ) முருகன், 32; நவீன் சார்லி, 28, என தெரிய வந்தது. இருவரையும் கைது செய்தனர்.