/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் இடம் ஆக்கிரமிப்பு; பொது மக்கள் குற்றச்சாட்டு
/
கோவில் இடம் ஆக்கிரமிப்பு; பொது மக்கள் குற்றச்சாட்டு
கோவில் இடம் ஆக்கிரமிப்பு; பொது மக்கள் குற்றச்சாட்டு
கோவில் இடம் ஆக்கிரமிப்பு; பொது மக்கள் குற்றச்சாட்டு
ADDED : பிப் 17, 2025 05:59 AM
பாகூர்; குருவிநத்தம் கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, மதில் சுவர் அமைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகூர் அடுத்த குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியின் விளையாட்டு திடல் திறந்த வெளியாக உள்ளது. 25 லட்ச ரூபாய் செலவில் விளையாட்டு திடலை சுற்றிலும் மதில் சுவர் அமைத்து மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், விளையாட்டு திடலுக்கு அருகே, குருவிநத்தம் கோவிலுக்கு சொந்தமான இடத்தையும் ஆக்கிரமித்து மதில் சுவர் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, பொது மக்கள் தரப்பில், இந்து சமய அறநிலைத்துறை ஆணையரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;
குருவிநத்தம் கிராமத்தில் இந்து சமய நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் தேவஸ்தானம், பிடாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு, மதில் சுவர் அமைத்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு தொடர்பாக, கோவில் நிர்வாக அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் பணியை தடுத்து நிறுத்தி, நிலத்தை பாதுகாத்திட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.