sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

திட்டமிடல் இல்லாத ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்ட்: திட்டி தீர்க்கும் டெம்போ-ஆட்டோ- பஸ் ஓட்டுநர்கள்

/

திட்டமிடல் இல்லாத ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்ட்: திட்டி தீர்க்கும் டெம்போ-ஆட்டோ- பஸ் ஓட்டுநர்கள்

திட்டமிடல் இல்லாத ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்ட்: திட்டி தீர்க்கும் டெம்போ-ஆட்டோ- பஸ் ஓட்டுநர்கள்

திட்டமிடல் இல்லாத ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்ட்: திட்டி தீர்க்கும் டெம்போ-ஆட்டோ- பஸ் ஓட்டுநர்கள்


ADDED : மே 06, 2025 04:52 AM

Google News

ADDED : மே 06, 2025 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பல கோடி ரூபாய் செலவில் கட்டிய புதுபஸ் ஸ்டாண்ட் ஒருவழியாக திறக்கப்பட்டதாலும் டெம்போ, ஆட்டோ, பஸ்களின் பிரச்னை தீர்க்கப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டியின் தொலைநோக்கு பார்வையில்லாத திட்டத்தால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் சிட்டி புது பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டது. அன்றைய நள்ளிரவில் இருந்து புதுபஸ் ஸ்டாண்ட்டில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பல கோடி ரூபாய் செலவில் கட்டிய புதுபஸ் ஸ்டாண்ட் ஒருவழியாக திறக்கப்பட்டாலும் ஒன்றுக்கும் உதவவில்லை.புது பஸ் ஸ்டாண்டில் ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, டெம்போ, ஆட்டோ, பஸ்கள் என ஒருவருக்கொருவர் தினமும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்ன தான் பிரச்னை


பழைய பஸ் ஸ்டாண்டில் அய்யனார் கோவில் தெருவில் ஒரு வழி இருந்தது. அங்கு ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் இருந்தது. இதேபோல் பழைய பஸ்டாண்டில் பஸ்கள் உள்ளே நுழைவு இடத்திலும், வெளியேறும் இடத்திலும் இரண்டு ஆட்டோ ஸ்டாண்ட்கள் இருந்தன. இதுமட்டுமின்றி பாலத்தின் கீழ் பழைய ஸ்டாண்டின் நடுவில் டெம்போக்களும் நிறுத்தப்பட்டு இருந்தன.

ஆனால் ஸ்மார்ட் சிட்டி தீட்டிய பிளானில் அனைத்தும் குழப்பமாக்கிவிட்டது. அய்யனார் கோவில் தெரு வழி மூடப்பட்ட சூழ்நிலையில் அங்கிருந்த ஆட்டோக்கள், டெம்போக்கள் என அனைத்தும் பஸ் ஸ்டாண்டின் உள்ளே, வெளியே செல்லும் நுழைவு வழியில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்கள் உள்ளே செல்வதிலும், வெளியேறுவதிலும் கடும் பிரச்னை ஏற்படுகின்றது.

சில நேரங்களில் பஸ்கள் ஆட்டோ, டெம்போ நிற்கும் இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லுகின்றனர். இதனால் புது பஸ் ஸ்டாண்ட்டில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. தினமும் போக்குவரத்து போலீசாருக்கு இந்த பஞ்சாயத்துகளை தீர்த்து வைப்பது பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

ஓட்டுநர்கள் கூறும்போது, ஆட்டோ, டெம்போ, பஸ்கள் என அனைவரது கருத்தையும் நன்கு ஆராய்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்ட புது பஸ்ஸ்டாண்டை கட்டி இருக்க வேண்டும்.

ஏதே மனம்போன போக்கில் புது பஸ்ஸ்டாண்டை கட்டி கொடுத்து பல பிரச்னைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்திவிட்டது. இதுவரை தோழர்களாக பழகி வந்த நாங்கள் எதிரியாகி மோதும் நிலைக்கு தள்ளிவிட்டது.

இந்த பஸ் ஸ்டாண்டினால் பயணிகளின் பிரச்னையும் தீரவில்லை; எங்களில் பிரச்னையும் தீரவில்லை. இப்படி ஒரு திட்டமிடல் இல்லாத மோசமான பஸ் ஸ்டாண்டை கட்டி இருக்கவே தேவையில்லை. நடைமுறையை புரிந்து கொள்ளாமல் ஏ.சி. அறையில் இருந்து கொண்டு பிளான் போட்டால் இப்படி தான் இருக்கும்.

டெம்போ, ஆட்டோ, பஸ்கள் ஓட்டுநர்கள் மோதல் இல்லாமல் இருக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us