/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணை ஆபாசமாக சித்தரித்த தென்காசி வாலிபர் கைது
/
பெண்ணை ஆபாசமாக சித்தரித்த தென்காசி வாலிபர் கைது
ADDED : ஏப் 24, 2025 07:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி பெண்ணை, சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்த, தென்காசி வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த ஒருவர், தனது மனைவியை சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்துள்ளதாக, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சீனியர் எஸ்.பி., நாராசைதன்யா, எஸ்.பி., பாஸ்கர் ஆகியோர் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பெண்ணின் புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்தது, தென்காசி மாவட்டம், வீரசிகாமணியை சேர்ந்த சிவசக்தி மகன் மனோகர், 23, என்பது தெரிய வந்தது.
போலீசார் தென்காசிக்கு சென்று, மனோகரை பிடித்து விசாரித்தனர். அவர், புதுச்சேரி பெண் உள்ளிட்ட பல பெண்களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் இருந்து திருடி, அதனை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பணம் பறித்ததை ஒப்புக் கொண்டார்.
அதையடுத்து, புகைப்படத்தை மார்பிங் செய்ய பயன்படுத்திய கருவி, மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மனோகரை கைது செய்து, புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா கூறுகையில், 'சமூக வலைதளத்தில் அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து வரும் நட்பு கோரிக்கையை ஏற்க வேண்டாம்.
அவர்களுடன் உரையாடுவதையும், புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்க்கவும். சைபர் குற்றம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், உடனடியாக கட்டணமில்லா எண் 1930 அல்லது cybercrime.gov.inஎன்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.