/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கேலோ இந்தியா அஷ்மிதா திட்டத்தில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி
/
கேலோ இந்தியா அஷ்மிதா திட்டத்தில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி
கேலோ இந்தியா அஷ்மிதா திட்டத்தில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி
கேலோ இந்தியா அஷ்மிதா திட்டத்தில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி
ADDED : நவ 27, 2025 04:30 AM

புதுச்சேரி: மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கேலோ இந்தியா அஷ்மிதா திட்டத்தின் கீழ் மகளிர்களுக்கான மாநில அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி நடந்தது.
கோரிமேடு விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியில் 8 மகளிர் அணிகள் கலந்து கொண்டன.
போட்டியில் லாஸ்பேட்டை அப்துல்கலாம் அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.
2ம் இடத்தை முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லுாரியும், 3ம் இடத்தை கோரிமேடு ஜே.ஜே.டென்னிஸ் பால் அசோசியேஷன் அணியும் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, புதுச்சேரி டென்னிஸ் பால் கிரிக்கெட் அசோசியேஷன் சங்க செயலாளர் ரத்தினபாண்டியன் தலைமை தாங்கினார்.
இணை செயலாளர் பழனிவேல், தொழிலாளர் துறை ஆய்வாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கி, பாராட்டினார்.