/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டென்னிஸ் பால் கிரிக்கெட் புதுச்சேரி அணி 3வது இடம்
/
டென்னிஸ் பால் கிரிக்கெட் புதுச்சேரி அணி 3வது இடம்
ADDED : ஜன 18, 2024 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அகில இந்திய டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில், புதுச்சேரி சிறுமியர் அணி 3வது இடம் பிடித்தது.
ஏழாவது அகில இந்திய டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி, உத்தரகாண்ட் மாநிலம், உத்தம்சிங் நகரில் கடந்த 11 முதல் 13ம் தேதி வரை நடந்தது.
இதில் 14 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் பிரிவில் புதுச்சேரியைச் சேர்ந்த அணி பங்கு பெற்றது. இதில், சிறுமியர் அணி மூன்றாம் இடம் பிடித்தது.
அணியின் மேலாளராக ரத்தின பாண்டியன் மற்றும் பயிற்சியாளராக ஜனா, ஜெசி கலந்து கொண்டனர்.