நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெத்திசெட்டிப்பேட்டை சித்தி விநாயகர், சிவசுப்ரமணியர் கோவிலில், 11ம் ஆண்டு மகா கும்பாபிேஷக தின பூர்த்தி, 108 வலம்புரி சங்காபிேஷகம், பஞ்சமூர்த்தி வீதியுலா மற்றும் தைப்பூச விழா நடக்கிறது.
இன்று (31ம் தேதி) காலை 7:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, 108 வலம்புரி சங்கு பூஜை, 9:00 மணிக்கு மகா அபிேஷகம், 108 சங்காபிேஷகம் நடக்கிறது. நாளை 1ம் தேதி காலை 8:00 மணிக்கு 108 பால்குடம் மற்றும் கருவடிக்குப்பம் விநாயகர் கோவிலில் இருந்து மாட வீதியில் வள்ளலார் வீதியுலா, சிவசுப்ரமணியர் சுவாமிகளுக்கு பால் அபிேஷகம் நடக்கிறது. 11:00 மணிக்கு வள்ளலார் தைப்பூச அபிேஷகம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை, திருப்பணிக்குழு தலைவர் மணி, கணேசன், கோவில் நிர்வாக அதிகாரி பிரபாகரன், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

