தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாவட்ட எறிபந்து போட்டியில் தாகூர் பப்ளிக் பள்ளி சாதனை

மாவட்ட எறிபந்து போட்டியில் தாகூர் பப்ளிக் பள்ளி சாதனை

மாவட்ட எறிபந்து போட்டியில் தாகூர் பப்ளிக் பள்ளி சாதனை


ADDED : செப் 10, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: நாமக்கல் மாவட்டம் வெப்படையில் உள்ள வாணி இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி நடந்தது.

இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 17 அணிகள் கலந்து கொண்டன. அதில், தேவியாக் குறிச்சி, தாகூர் பப்ளிக் பள்ளியின் 12 பேர் கொண்ட மாணவர்கள் அணி, சூப்பர் சீனியர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கொங்கு சகோதயா கல்விக் குழுமம் சார்பில் சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இரண்டாம் பரிசு வென்ற தாகூர் பப்ளிக் பள்ளி மாணவர்களை, பள்ளியின் தலைவர் முத்துசாமி, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் காளியண்ணன், இணைச் செயலாளர் அருண்குமார், பள்ளி நிர்வாக உறுப்பினர் ராஜு, முதல்வர் கீதா, விளையாட்டு துறை ஆசிரியர்கள் ஆனந்த், வினோத், தேன்மொழி, சத்யா ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us