/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு
/
முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு
ADDED : ஜன 19, 2026 05:00 AM
புதுச்சேரி: பி.ஆர்.டி.சி.யில், ஒப்பந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி, வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பி.ஆர்.டி.சி., தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் தமிழ்செல்வன் அறிக்கை;
கடந்த 2015ம் ஆண்டு முதல், பி.ஆர்.டி.சி.,யில், ஒப்பந்த அடிப்படையில், டிரைவர்கள், கண்டக்டர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டது.இது தொடர்பாக, முதல்வர் முன்னிலையில், நடந்த பேச்சுவார்த்தையில், 3 மாத கால அவகாசம் கேட்கப்பட்டது.
இந்நிலையில், ஒப்பந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பெற்று வரும் ஊதியத்தோடு, சம்பளத்தை உயர்த்தி வழங்குவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 12ம் தேதி ஊதியத்தை உயர்த்தி வழங்கிய முதல்வர் ரங்கசாமி, உறுதுணையாக இருந்த நேரு எம்.எல்.ஏ.,வுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், 3 மாதத்தில்,பணி நிரந்தரம் மற்றும் 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

