/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி பங்கு சந்தையில் இழந்த பணத்தை மீட்டு கொடுத்த போலீசாருக்கு நன்றி
/
போலி பங்கு சந்தையில் இழந்த பணத்தை மீட்டு கொடுத்த போலீசாருக்கு நன்றி
போலி பங்கு சந்தையில் இழந்த பணத்தை மீட்டு கொடுத்த போலீசாருக்கு நன்றி
போலி பங்கு சந்தையில் இழந்த பணத்தை மீட்டு கொடுத்த போலீசாருக்கு நன்றி
ADDED : மே 28, 2025 11:42 PM

புதுச்சேரி: போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்து இழந்த 18 லட்சம் ரூபாயை மீட்டு கொடுத்த சைபர் கிரைம் போலீசாருக்கு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
கோரிமேடு ஜிப்மரில் பணியாற்றி வரும் சஜித், என்பவரை கடந்த மார்ச் மாதம் தொடர்பு கொண்ட நபர், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், அதிக சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பி சஜித் பல தவணைகளாக 30 லட்சம் ரூபாய் வரை, மர்மநபர் தெரிவித்த பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். பின், அதன் மூலம் வந்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
சஜித் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், சஜித் அனுப்பிய பணம் எந்த வங்கி கணக்கில் சென்றுள்ளது என, ஆய்வு செய்து, அந்த வங்கி கணக்கை முடக்கினர். சஜித் அனுப்பிய பணத்திற்கான ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து, கோர்ட் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் 18 லட்சம் ரூபாய் வரை மீட்டு, அவரிடம் ஒப்படைத்தனர். மோசடி நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இழந்த பணத்தை மீட்டு கொடுத்ததற்காக, சஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சென்று, எஸ்.பி., பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ், போலீசார் ஜெயக்குமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தனர்.