/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
58ம் ஆண்டு கம்பன் விழா புதுச்சேரியில் 3 நாள் நடக்கிறது
/
58ம் ஆண்டு கம்பன் விழா புதுச்சேரியில் 3 நாள் நடக்கிறது
58ம் ஆண்டு கம்பன் விழா புதுச்சேரியில் 3 நாள் நடக்கிறது
58ம் ஆண்டு கம்பன் விழா புதுச்சேரியில் 3 நாள் நடக்கிறது
ADDED : மே 04, 2025 04:48 AM

புதுச்சேரி : புதுச்சேரியில், 58ம் ஆண்டு, கம்பன் விழா வரும் 9ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரியில் கம்பன் விழாவை முன்னிட்டு, இ.சி.ஆர்., சாலை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி யில், நடந்த நிகழ்ச்சியில் கம்பன் கழக தலைவர் செல்வகணபதி எம்.பி., செயலாளர் சிவகொழுந்து, பொருளாளர் பழனி அடைக்கலம் ஆகியோர் பங்கேற்று, விழா பத்திரிக்கையை வெளியிட்டனர்.
பின், செயலாளர் சிவ கொழுந்து கூறுகையில், 'புதுச்சேரி கம்பன் கலையரங் கத்தில், 58ம் ஆண்டு கம்பன் விழா, வரும் 9ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
விழாவில் இலங்கை நாட்டில் இருந்து தமிழஞர்கள், புலவர்கள் சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர்.
9ம் தேதி துவங்கும் முதல் நாள் விழாவில், காலை 9:30 மணிக்கு கம்பன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியை, தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி ராமசுப்ரமணியன் துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து, மலர் வெளியீடு மற்றும் சிறந்த தமிழ் புலவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
10ம் தேதி இளையோர் அரங்க நிகழ்ச்சியில், கம்பனின் நான் கண்ட ராமன் நிகழ்ச்சி நடக்கிறது.
காலை 10:45 மணிக்கு வழக்காடு மன்றம் நடக்கிறது. அன்று மாலை 6:30 மணியளவில் பட்டிமன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
11ம் தேதி மூன்றாம் நாள் நிகழ்ச்சியில், காலை 9:00 மணிக்கு காப்பியம் காட்டும் குணங்கள் என்ற சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு மேல்முறையீட்டை தொடர்ந்து, முதல் நாள் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு நிகழ்ச்சி நடக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

