/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அலமாரியில் வைத்த 6.5 சவரன் நகை மாயம்
/
அலமாரியில் வைத்த 6.5 சவரன் நகை மாயம்
ADDED : அக் 31, 2025 11:23 PM
புதுச்சேரி: வீட்டில் அலமாரியில் வைத்த ஆறரை சவரன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேதராப்பட்டு அடுத்த கரசூர், மேட்டு தெருவை சேர்ந்தவர் அப்பாதுரை மகன் ஆனந்தராஜ்,34; தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, கடந்த 13 ம் தேதி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின், நெக்லஸ், செயின் உள்ளிட்ட ஆறரை சவரன் நகைகளை கழற்றி, அலமாரியில் வைத்தார். கடந்த 16ம் தேதி அலமாரியை திறந்து பார்த்தபோது நகைகளை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், வீட்டில் இருந்த ஆனந்தராஜியின் தம்பி கிருஷ்ணராஜ்,32, என்பவரை காணவில்லை.
ஆனந்தராஜ் புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

