/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அம்ரூத் திட்டத்திற்கு கைமேல் பலன் பிள்ளையார் கோவில் குளம் நிரம்பியது

ADDED : டிச 05, 2024 06:59 AM

புதுச்சேரி: அம்ரூத் திட்டத்தின் கீழ் புத்துயிர் பெற்ற கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் குளம் முழுவதுமாக தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரே பிள்ளையார்கோவில் குளம் 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. இக்குளம் காலாப்பட்டு தொகுதியிலும், கரையோரம் லாஸ்பேட்டை தொகுதியிலும் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இக்குளம் குப்பை கூளங்கமாக, கழிவு நீர் சேர்ந்து துர்நாற்றம் வீசியது. அதை தொடர்ந்து அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், 78.39 லட்சம் செலவில் கடந்தாண்டு இக்கோவில் குளம் புத்துயிர் பெற்றது.
கோவில் குளம் முழுவதும் துார்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. அரசின் முயற்சிற்கு தற்போது நல்ல பயன் கிடைத்துள்ளது. மொத்தம் 13.50 எம்.எல்.டி., கொள்ளவிற்கு தண்ணீர் தேங்கி அழகிய குளமாக ரம்மியாக காட்சியளிக்கின்றது.
இது குறித்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கூறுகையில், 'அம்ரூத் திட்டத்தின் கீழ் இக்குளம் துார்வாரி பராமரிக்கப்பட்டதால், தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. கடந்த காலங்களில் இப்பகுதியில் 180 அடி ஆழத்திற்கு சென்றால் தண்ணீர் கிடைக்கும்.
தற்போது 90 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது' என்றார்.