sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தேர்தல் நெருங்குவதால் காலியாகும் சட்டசபை

/

 தேர்தல் நெருங்குவதால் காலியாகும் சட்டசபை

 தேர்தல் நெருங்குவதால் காலியாகும் சட்டசபை

 தேர்தல் நெருங்குவதால் காலியாகும் சட்டசபை


ADDED : மார் 15, 2026 04:56 AM

Google News

ADDED : மார் 15, 2026 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாக உள்ளது. அதனையொட்டி, அரசின் அனைத்து துறைகளும் தேர்தல் பணிக்கு தயார் நிலையில் உள்ளது. பேனர்கள், சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில், அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியானால், சட்டசபை மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் அரசு அலுவலகங்கள் தேர்தல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மட்டம் காபந்து அரசு பணிகளுக்கு மட்டுமே, அரசு வாகனங்களை பயன்படுத்த முடியும்.

அதனா ல், மக்கள் பிரதிநிதிகள் சட்டசபை மற்றும் தொகுதிகளில் உள்ள தங்கள் அலுவலகங்களில் உள்ள முக்கிய ஆவணங்களை தங்களது பிரத்யோக அலுவலகத்திற்கு மாற்றும் பணியை துவங்கியுள்ளனர்.

முதல்கட்டமாக, சட்டசபையில் உள்ள தங்கள் அறைகளை காலி செய்துவிட்டனர். இதனால், எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் சட்டசபை அலுவலக வளாகம், நேற்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.






      Dinamalar
      Follow us