/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆலமரம் பேசியதே... எம்.எல்.ஏ., லக...லக...
/
ஆலமரம் பேசியதே... எம்.எல்.ஏ., லக...லக...
ADDED : ஆக 23, 2025 07:10 AM

புதுச்சேரி : ஊசுட்டேரி பிரச்னை தொடர்பாக, வனத்துறை அதிகாரியிடம், சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.,வான சாய்சரவணன்குமார் நேற்று மதியம் ஒரு மணி அளவில், தனது மனைவி மற்றும் ஆதரவாளர்களுடன், புதுச்சேரி, வனத்துறை அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டார்.
அங்கிருந்த வனகாப்பாளர் அருள்ராஜிடம் அவர் புகார் அளித்தார். அப்போது, அவர், ஊசுட்டேரி பகுதியில் உள்ள மரங்களை மர்ம நபர்கள் வெட்டி வருவ தாக ஏற்கனவே நான் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
ஏரியை சுற்றி வேலி அமைக்காததால் மரங்கள் வெட்டப்படுகிறது. வனத்துறையினர் ஆய்வு செய்வதில்லை.
சில தினங்களுக்கு முன் ஏரி கரையில் உள்ள பெரிய மூன்று ஆலமரங்கள் திடீரென தீயில் கருகியிருந்தது. மின்னல் தாக்கியதாக கூறினர். தீயணைப்பு துறை விசாரணையில் தீ வைத்து எரிக்கப்பட்டது தெரிய வந்தது. அடுத்த சில தினங்களில் மூன்று மரங்களும் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.
நான், அந்த வழியே செல்லும்போது, அந்த ஆலமரம் என்னிடம் பேசுகிறது. 'நான் பல ஆண்டாக இங்கு இருக்கிறேன். நான் உன்னை இந்த தொகுதி் எம்.எல்.ஏ.,வாக்கி, அமைச்சராக்கி அழகு பார்த்தேன். நீ என்னை பாதுகாக்க மாட்டேன்கிறாய். ஆளு, ஆளுக்கு என்னை அழித்து வருகின்றனர்' என்கிறது என்றார்.
பின்னர், மரம் வெட்டிய புகார் மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்கு வனகாப்பாளர் அருள்ராஜி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தினால், வனத்துறை அலுவலகத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.