UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:37 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் தேசிய மீனவர் பேரவை சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு, தேசிய தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். ஹரிதாஸ் வரவேற்றார். எழுத்தாளர் ராமஜெயம் எழுதிய 3 நுால்களை அமைச்சர் ராஜவேலு வெளியிட, தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து பெற்றுக் கொண்டார்.
புதுச்சேரி மீனவ சமுதாய தலைவர்கள் ராமஜெயம், கோவிந்தசாமி, விவேகானந்தன், கர்ணாமூர்த்தி, பாவாடைசாமி ஆகியோருக்கு நெய்தல் மாமணிகள் விருது வழங்கப்பட்டது.
விழாவில், பா.ஜ., மீனவரணி தலைவர் மாரியப்பன், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., நித்தியானந்தம், காங்கேயன், விஸ்வநாதன், மகாலிங்கம், சாம்பசிவம், செல்வம், ராஜவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.
ராமஜெயம், கோவிந்தசாமி ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.
