தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஓட்டுப்பதிவு தொடர்பான புகார் தெரிவிக்க போன் எண் வெளியீடு

ஓட்டுப்பதிவு தொடர்பான புகார் தெரிவிக்க போன் எண் வெளியீடு

ஓட்டுப்பதிவு தொடர்பான புகார் தெரிவிக்க போன் எண் வெளியீடு


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 07:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் இன்று 6ம் தேதி நடக்கும் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவைச் சமூகமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்காக மாவட்ட தேர்தல் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் தலா இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கேமராக்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இணையவழி நேரலை கண்காணிப்பு நேற்று பிற்பகல் 3:00 மணி முதல் செயல்பாட்டிற்கு வந்தது.

ஓட்டுப்பதிவு தொடர்பான புகார்களைத் தெரிவிக்க விரும்புவோர், இணையவழி நேரலை கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மாவட்ட தேர்தல் அதிகாரியின் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவிக்க 0413–2299558 என்ற தொலைபேசி எண்களையும். துணை மாவட்ட தேர்தல் அதிகாரி கண்ணபிரானிடம் புகார் தெரிவிக்க 94433 75089 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இக்கட்டுப்பாட்டு அறைகள் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us