UPDATED : நவ 07, 2026 06:21 PM
ADDED : நவ 07, 2026 06:18 PM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில முத்தமிழ் கழகம், கண்மணி கிரியேஷன்ஸ் சார்பில் முப்பெரும் விழா தமிழ்ச் சங்கத்தில் நடந்தது.
விழாவில் சுங்கம் மற்றும் மத்திய கலால்துறை முன்னாள் உதவி ஆணையர் சண்முகசுந்தரம் வரவேற்றார். கண்மணி கிரியேஷன்ஸ் தலைவர் ராஜா நோக்கவுரையாற்றினார். தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். கலா விசு, மேகராஜ் முன்னிலை வகித்தனர்.
பேராசிரியர் குழந்தைவேலனார், கலைபண்பாட்டுத்துறை முன்னாள் இயக்குனர் கலியபெருமாள், தமிழ்ச் சங்க செயலாளர் சீனு மோகன்தாஸ், பொருளாளர் பாலசுப்ரமணியன் வாழ்த்தி பேசினர். பார்த்தசாரதி நன்றி கூறினார்.
விழாவில், யுவ புரஸ்கார் விருது பெற்ற வீரம்மாள் உள்ளிட்ட 50 கவிஞர்கள் மற்றும் 50 கலைஞர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, கலைஞனும், கவிஞனும் நிரந்தரமானவன் என்ற தலைப்பில் கவிதை முழக்கம், என்.எஸ்.கே கலைக் குழுவின் சிரித்து வாழவேண்டும் என்ற நகைச்சுவை நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சி நடந்தது.
