/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரசாரத்தை துவக்கிய அங்காளன் எம்.எல்.ஏ.,
/
பிரசாரத்தை துவக்கிய அங்காளன் எம்.எல்.ஏ.,
ADDED : ஜன 09, 2026 05:29 AM

திருபுவனை: அங்காளன் எம்.எல்.ஏ., தேர்தல் பிரசாரத்தை நேற்று துவங்கினார்.
திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ.,வான அங்காளன் வரும் சட்டபை தேர்தலில் லட்சிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளார். அவர், நேற்று மக்களை சந்தித்து பிரசாரத்தை துவக்கினார்.
திருபுவனை தொகுதியில் கடந்த 2001ல் காங்., சார்பில், போட்டியிட்டு வெற்றிபெற்ற அங்காளன் எம்.எல்.ஏ., புதுச்சேரி கதர் கிராம வாரிய சேர்மனாக பதவி வகித்தார். 2006 தேர்தலில் வெற்றிபெற்று சமூக நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றார். 2011 தேர்தலில் 3வது முறையாக வெற்றிபெற்று எம்.எல்.ஏ., மற்றும் பிப்டிக் சேர்மனாக இருந்தார். 2016 தேர்த லில் தோல்வியை தழுவினார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 4வது முறையாக வெற்றிபெற்றார். இந்நிலையில் வரும் 2026 சட்ட சபை தேர்தலில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையிலான 'லட்சிய ஜனநாயக கட்சியின்' வேட்பாளராக ஐந்தாவது முறையாக திருபுவனை தொகுதியில் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் அங்காளன் எம்.எல்.ஏ., திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள்குப்பத்தில் தே ர்தல் பிரசாரத்தை நேற்று துவக்கினார். நிகழ்ச்சியில் அங்காளன் எம்.எல்.ஏ., கடந்த நான்கரை ஆண்டுகளாக தொகுதி முழுதும், அனைத்து கிராமங்களிலும் மக்களுக்காக தான் செய்த எண்ணற்ற திட்டப் பணிகளை எடுத்துக்கூறி, மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

