தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செட்டிப்பட்டு தடுப்பணை கனமழையால் நிரம்பியது

செட்டிப்பட்டு தடுப்பணை கனமழையால் நிரம்பியது

செட்டிப்பட்டு தடுப்பணை கனமழையால் நிரம்பியது


ADDED : நவ 19, 2024 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2024 07:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை, தொடர் கனமழையின் காரணமாக நிரம்பி வழிந்து வருகிறது.

திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு- திருவக்கரை சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு மூலம் விவசாயிகள் நலன்கருதி தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் கிராமப்புறங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்ந்து கனமழை காரணமாக, செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை, முழுதும் நிரம்பி வழிந்து வருகிறது.

நிரம்பி வழிந்து வரும் தண்ணீரில் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், செட்டிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரம் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, தடுப்பணை நிரம்பியுள்ளதால், ஆற்றின் இருகரைகளையும், மண் கொட்டி பலப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us