/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ்சிற்காக காத்திருந்த கர்ப்பிணியை காரில் அழைத்து சென்ற கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு
/
பஸ்சிற்காக காத்திருந்த கர்ப்பிணியை காரில் அழைத்து சென்ற கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு
பஸ்சிற்காக காத்திருந்த கர்ப்பிணியை காரில் அழைத்து சென்ற கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு
பஸ்சிற்காக காத்திருந்த கர்ப்பிணியை காரில் அழைத்து சென்ற கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு
ADDED : டிச 27, 2024 06:19 AM

காரைக்கால்: காரைக்காலில் மருந்துவ பரிசோதனை முடிந்துவிட்டு பஸ்சிற்காக காத்திருந்த கர்ப்பிணியை தனது காரில் அழைத்து சென்று அவரது வீட்டில் விட்ட கலெக்டரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.
காரைக்கால், திருப்பட்டினம் தொகுதி, பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் நேற்று 20ம் ஆண்டு சுனாமி தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க கலெக்டர் மணிகண்டன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் எம்.ஒ.எச்., பஸ் நிலையத்தில் நின்றிருந்த கர்ப்பிணியை பார்த்த கலெக்டர் மணிகண்டன் காரை நிறுத்தி அவரிடம் விசாரித்தார்.
அவர், நிரவி நடுக்கலாம் பேட் பகுதியை சேர்ந்த முத்து மனைவி நவோதமேரி என்றும், அரசு மருத்துவமனையில் பரிசோதனை முடித்துவிட்டு, பஸ்சிற்காக காத்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, நவோதமேரி அவருடன் இருந்த அவரது அத்தை டைசிமேரி ஆகியோரை கலெக்டர் தனது காரில் அழைத்துச் சென்று அவரது வீட்டில் பாதுகாப்பாக இறக்கி விட்டார்.
பின், அவரது வீட்டுக்கு சென்று மருந்துவ பரிசோதனை அட்டையை பார்வையிட்டார். பின், தேவையான உதவிகள் மற்றும் சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான உதவிகள் செய்து தருவதாக கூறிவிட்டு, உடல் ஆரோக்கியம் மற்றும் சத்தான உணவுகள் குறித்து அவருக்கு அறிவுரை வழங்கி, குழந்தை நல்லபடியாக பிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார். பின், சுனாமி நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதனிடையே கர்ப்பிணியை தனது காரில் அழைத்து சென்று அவரது வீட்டில் விட்ட கலெக்டர் மணிகண்டனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

