/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி மா.கம்யூ., போராட்டம் நடத்த முடிவு
/
ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி மா.கம்யூ., போராட்டம் நடத்த முடிவு
ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி மா.கம்யூ., போராட்டம் நடத்த முடிவு
ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி மா.கம்யூ., போராட்டம் நடத்த முடிவு
ADDED : பிப் 16, 2024 07:11 AM
புதுச்சேரி : ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி மா.கம்யூ., வரும் 19ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து மா.கம்யூ.,மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2015 செப்டம்பர் முதல் ரேஷன் கடைகள் மூடி வைக்கப்பட்டுள்ளது.நாட்டில் ரேஷன் கடை இல்லாத ஒரு மாநிலமாக புதுச்சேரி மாற்றப்பட்டுள்ளது. ஏழை, எளிய நடுத்தர மக்களின் உணவு பாதுகாப்பு கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநில அரசின் இலவச அரிசி திட்டத்தை மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டு அரிசிக்கு பணம் வங்கிகளில் செலுத்தப்படுகிறது.அண்டை மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு பகுதி மக்களுக்கு 14 அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதுச்சேரி மக்களுக்கு மட்டும் பணம் வழங்கப்படுவது ஏற்புடையதல்ல.
இதேபோல் பல ஆண்டுகள் ரேஷன் கடைகளில் வேலை செய்த ஊழியர்களுக்கு 50 மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை இதனால் 15க்கு மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.2023 பட்ஜெட்டில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூபாய் 7.9 கோடி நிதி ஒதுக்கி 5 மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டும் வழங்கப்படவில்லை.
எனவே ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி 19 முதல் 25ம் தேதி வரை காத்திருப்பு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.