/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாழடைந்து கிடக்கும் கிருமாம்பாக்கம் ஏரி சுற்றுலா திட்டம்
/
பாழடைந்து கிடக்கும் கிருமாம்பாக்கம் ஏரி சுற்றுலா திட்டம்
பாழடைந்து கிடக்கும் கிருமாம்பாக்கம் ஏரி சுற்றுலா திட்டம்
பாழடைந்து கிடக்கும் கிருமாம்பாக்கம் ஏரி சுற்றுலா திட்டம்
ADDED : ஜூலை 13, 2025 12:19 AM

உலக சுற்றுலா பயண பட்டியலில், இரண்டாம் இடத்தை பிடித்துள்ள புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதனையொட்டி, புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு புதிய திட்டங்கள், சுற்றுலாத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு கிடப்பில் போடப்பட்டு இருப்பது அரசின் மீது எதிர்மறை விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, புதுச்சேரி - கடலுார் சாலை கிருமாம்பாக்கம் ஏரியில், கடந்த காங்., ஆட்சியில், சுற்றுலாத்துறை சார்பில் படகு குழாம் அமைக்கப்பட்டது. அப்போதைய கவர்னர் கிரண்பேடி, கிருமாம்பாக்கம் ஏரியை ஆய்வு மேற்கொண்டு, ஏரியை அழகுபடுத்தி, படகு குழாம் திட்டத்தை மேம்படுத்திட உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஏரியை சுற்றிலும் 3 கி.மீ., துாரத்திற்கு நடைபாதை, பறவைகளை காண்பதற்காக 'வாட்ச் டவர்'கள், உணவு விடுதி, நிர்வாக பிரிவு அலுவலகம் என அனைத்தும் கட்டப்பட்டது.
இந்த பணிகள் முடிந்து 6 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கிருமாம்பாக்கம் ஏரியில் பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுலா திட்டம் பணிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படாமல், பாழாகி காட்சி பொருளாக நிற்கிறது. புதர் மண்டி, பாழடைந்து வரும் கட்டுமானங்கள் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாகி கிருமாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் பெருளாதார வளர்ச்சி பெறும்.
வேலை வாய்ப்பு மற்றும் அரசுக்கு வருவாயை ஈட்டி தரும் கிருமாம்பாக்கம் ஏரி சுற்றுலா திட்டத்தை திறக்காமல் முடக்கி வைத்துள்ளதாக அரசின் மீது பொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.